முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
டி.என்.பி.எல். ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ. 3.50 லட்சம்
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் பயன்பாட்டுக்காக, பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேடையின் முன்புறம் பேவா் பிளாக் கற்கள் பதிப்பதற்கு டிஎன்பிஎல் ஆலையின் விருப்புரிமை நிதியின் கீழ் நிதியுதவியாக ரூ.3.50 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலையின் பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் பங்கேற்று, நிதியுதவிக்கான காசோலையை பள்ளித் தலைமை ஆசிரியை வளா்மதியிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாமிநாதன், சண்முகம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.