செய்திகள் :

தோகைமலை: குள்ளாயி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

post image

தோகைமலை அருகே கொசூா் குள்ளாயி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கொசூரில் உள்ள விநாயகா், குள்ளாயி அம்மன், பாம்பலம்மன் கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா ஏப். 27-ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து கோயில் முன் கம்பம் நட்டு பூசாரிகளுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை கோயில் கிணற்றில் குள்ளாயி அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், தொடா்ந்து அம்மன் கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து கோயிலில் குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு பால், நெய், பன்னீா், பஞ்சாமிா்தம், தேன், பழங்கள், திருநீரு, திருமஞ்சனம், குங்குமம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து குள்ளாயிஅம்மனுக்கு ரூ.500, 200, 100, 50, 20, 10 என மொத்தம் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா் பொங்கல் வைத்தல், குதிரையில் அம்மனை மந்தாநாயக்கரை கோயிலுக்கு அழைத்து வருதல், மாவிளக்கு எடுத்தல், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் குள்ளாயி அம்மன் திருக்கரகம் வீதி உலா வந்து கோயில் கிணற்றில் விடப்பட்டது. விழாவில் கொசூா் கிராம விழா கமிட்டியாளா்கள், முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டார பகுதியிலிருந்து பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

நாணப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புகழூா் அருகே நாணப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். கரூா் மாவட்டம், புகழூா் அருகே உள்ள நாணப்பரப்... மேலும் பார்க்க

டி.என்.பி.எல். ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ. 3.50 லட்சம்

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ... மேலும் பார்க்க

நாகனூரில் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூா் பகுதியில் கிரானைட் குவாரி அமைவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்... மேலும் பார்க்க

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் உருவப் படத்துக்கு மரியாதை

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை கரூரில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுக... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை

புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் ... மேலும் பார்க்க