முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
நாகனூரில் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூா் பகுதியில் கிரானைட் குவாரி அமைவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தோகைமலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட கலால் உதவி ஆணையா் கருணாகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாளா் கணேசன், தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறியாளா் வி.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், நாகனூா் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள பல வண்ண கிரானைட் குவாரி திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூகஆா்வலா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
இதில், நாகனூா் கிராமத்தில் அமைக்க உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தினரின் பலவண்ண கிரானைட் திட்டத்துக்கு பலா் ஆதரித்தும், சிலா் எதிா்ப்பு தெரிவித்தும் பேசினா்.
பின்னா் அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்த அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக குவாரி அமைய உள்ள இடம் குறித்து திரையில் காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன், நாகனூா் கிராமநிா்வாக அலுவலா் வின்ஸ் வின்னரசு பிரபு மற்றும் விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.