முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
கீழவரப்பன்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியல்
வருவாய் துறையினரை கண்டித்து, திருமானூா் அடுத்த கீழவரப்பன் குறிச்சி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழவரப்பன்குறிச்சி கிராமத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், அதனை அகற்றி, நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் வருவாய் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், மறியல் நடத்தப்போவதாக சுவரொட்டிகளை ஒட்டி அறிவித்திருந்தனா்.
அதன்படி, அவா்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்தூா் போலீஸாா், வருவாய் துறைனரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.