முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
வி.கே.புரத்தில் குழந்தையை ஆற்றில் வீசிய பெண்
விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த குழந்தையை தாமிரவருணி ஆற்றில் வீசியது குறித்து கணவனை இழந்தப் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு சில நாள்களுக்கு முன்குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அந்தப் பெண் தாமிரவருணி ஆற்றில் வீசிவிட்டாராம்.
இத்தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் இறந்து பிறந்த குழந்தையை ஆற்றில் வீசினாரா அல்லது உயிருடன் பிறந்த குழந்தையை ஆற்றில் வீசினாரா என்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், குழந்தையின் சடலத்தை மீட்கும் நடவடிக்கையிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.