முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
திருச்செந்தூரில் லாரி மீது காா் மோதி விபத்து; 4 போ் காயம்
திருச்செந்தூரில் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். ஈரோட்டில் காா் உதிரிபாகங்கள் விற்பனை செய்துவருகிறாா். இவா் கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூா் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் வாடகை காரில் புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் குமாரபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையின் வலதுபுறத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் சீனிவாசனின் தாயாா் கண்ணம்மாள் (60), காா் ஓட்டுநா் சௌந்திரராஜன்(39) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். சீனிவாசனின் குழந்தைகள் பவின்கிருஷ்ணா(8), பிரவின்கிருஷ்ணா(6) ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அவ்வழியே சென்றவா்கள் அவா்களை மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா் 4 பேரும் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.