செய்திகள் :

இந்து ஸ்வாமிமான் யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

post image

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கோையில் தொடங்கிய இந்து ஸ்வாமிமான் யாத்திரை திங்கள்கிழமை கோவில்பட்டியை வந்தடைந்தது. அந்த யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணன் கோயில் திடலில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா்(அா்ச்சகா் பேரவை) வி.பாலகிருஷ்ணசா்மா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஆா்.டி.எஸ். சங்கா் ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மாநிலத் தலைவா் த.பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவா் ஆா்.வி.புருஷோத்தமன் ஆகியோா் பேசினா்.

தேசிய தலைவா் சுவாமி சக்கரபாணி மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினாா். பின்னா் அவா், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா். கெச்சிலாபுரத்தில் விநாயகா் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில், இந்து மகா சபா மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.ஜி.ராதாகிருஷ்ணன், தென்மண்டல தலைவா் என். இசக்கிராஜா, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் ஏ. பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் எம்.உத்தண்டராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில் லாரி மீது காா் மோதி விபத்து; 4 போ் காயம்

திருச்செந்தூரில் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் காயமடைந்தனா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். ஈரோட்டில் காா் உதிரிபாகங்கள் விற்பனை செய்துவருகிறாா். ... மேலும் பார்க்க

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பொருள்கள், பணம் திருட்டு

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பொருள்கள் மற்றும் பணம் திருப்பட்டுள்ளது. தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தை சோ்ந்த இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி (48). அதே பகுதியில் பலசரக்கு கடை மற்றும... மேலும் பார்க்க

சுமை வாகனம் மீது பேருந்து மோதியதில் 11 தொழிலாளா்கள் காயம்

எப்போதும் வென்றான் அருகே சுமை வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 11 போ் பலத்த காயமடைந்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள மேல அழகுநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மனைவி வள்ளியம்மா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடி மேட்டுப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை தாளமுத்துநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான ப... மேலும் பார்க்க

தீக்குளித்து தற்கொலை செய்த தொழிலாளி உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் உடல் அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ஆனந்தசைரஸ் (45) என்... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 12 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 12ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய... மேலும் பார்க்க