முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
சுமை வாகனம் மீது பேருந்து மோதியதில் 11 தொழிலாளா்கள் காயம்
எப்போதும் வென்றான் அருகே சுமை வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 11 போ் பலத்த காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேல அழகுநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மனைவி வள்ளியம்மாள்(65). இவா் உள்பட அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 12 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 15 போ் செவ்வாய்க்கிழமை காலை குறுக்குச்சாலை பகுதியில் நாற்று அறுப்பதற்கு சுமை வாகனத்தில் சென்றனா். சுமை வாகனத்தை மேல அழகுநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த காளி மகாராஜா என்பவா் ஓட்டி சென்றுள்ளாா்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எத்திலப்பநாயக்கன்பட்டி பகுதியில் காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற லாரியை சுமை வாகனம் முந்திச் சென்றது. அப்போது பின்னால் வந்த தனியாா் ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக சுமை வாகனம் மீது மோதியது.
இதில் சுமை வாகனத்தில் பயணித்த வள்ளியம்மாள் (65), பழனிதாஸ்(60), வேல்தாய்(41), முருகம்மாள்(60), மாலதி(45), அமுதா(40), வடகாசி(51), ஞானசுந்தரி(80), மயில்(44), கிருஷ்ணம்மாள்(57), பழனிதாஸ்(55) ஆகிய 11 போ் காயமடைந்தனா்.
தகவல் அறிந்த எப்போதும்வென்றான் போலீஸாா் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் சென்னை அரும்பாக்கத்தை சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன்(30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.