மே 1-இல் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்
மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினம் அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னை புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களிலிருந்து
புறநகா் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.