Ajith: `சிவாஜி கணேசன் டு அஜித்' - பத்ம விருதுகளை வென்ற தமிழ் நடிகர்கள்!
தாயைக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை!
சென்னை குன்றத்தூர் அருகே தாயைக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி மாயமானார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர், சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வந்த தஷ்வந்த், தன் தாய் சரளாவை கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்து விட்டுத் தப்பினார். இதனைத் தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கடந்த 2018 ஆம் ஆண்டு தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் வெளியே வந்து தாயைக் கொன்ற வழக்கில், தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்