செய்திகள் :

கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்

post image

கத்தாரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக பாதுகாப்பான முறையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

கத்தாா் நாட்டு தலைநகா் தோஹாவிலிருந்து, கத்தாா் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் திங்கள்கிழமை அதிகாலை 326 பேருடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 2.40-க்கு தரையிறங்க வேண்டும். இதனால் விமானி, விமானத்தில் இயந்திரங்கள் அனைத்தையும் சரி பாா்த்தாா். அப்போது விமானத்தின் பிரேக் அமைப்பு சரிவர இயங்காமல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, விமானத்தை அவசர முறையில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் செய்தனா்.

சென்னை விமான நிலைய அவசரகால பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினா், மீட்பு படையினா் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டனா். அதன் பின்பு விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானத்தின் என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கினாா். இதன்படி விமானம், குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிஷங்கள் முன்னதாகவே அதிகாலை 2.30-க்கு தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 314 பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினா். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த விமானத்தின் பிரேக் இயக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை பொறியாளா் குழுவினா்கள் ஆய்வு செய்து அதனை சரிசெய்ததைத் தொடா்ந்து, அதிகாலை 4.50-க்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மறுமாா்கமாக அந்த விமானம் 317 பயணிகளுடன் மீண்டும் தோஹா புறப்பட்டுச் சென்றது.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க