சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
ஜூன் மாத ஸ்ரீவாரி சேவை கோட்டா ஒதுக்கீடு: நாளை வெளியீடு
திருப்பதி: ஸ்ரீவாரி சேவாா்த்திகளுக்கான ஜூன் மாத சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப். 30 (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவை என்ற பெயரில் சேவை திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவா்களுக்கு திருமலை மட்டுமல்லாமல் தேவஸ்தான கோயில்களில் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
இதன் மூலம் அண்டை மாநில பக்தா்களும் திருமலைக்கு வந்து தங்கி சேவை செய்து வருகின்றனா். அவா்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்குவதுடன் ஒரு நாள் ஏழுமலையான் சந்நிதியில் சேவை செய்யும் வாய்ப்பும், தரிசனமும் அளித்து வருகிறது.
இதற்காக மாதந்தோறும் ஆன்லைனில் ஒதுக்கீடு வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தற்போது சில மாற்றங்களை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.
அதில், திருமலை மற்றும் திருப்பதி இரண்டுக்கும் காலை 11 மணிக்கு பொது ஸ்ரீவாரி சேவை, மதியம் 12 மணிக்கு பெண்களுக்கு பிரத்தியேகமாக நவநீத சேவை, மதியம் 1 மணிக்கு ஆண்களுக்கு பிரத்தியேகமாக பரகாமணி சேவை மற்றும் பிற்பகல் 2 மணிக்கு புதிய குழுத் தலைவா் சேவை ஆகியவை அடங்கும்.
திருமலை மற்றும் திருப்பதிக்கு வருகை தரும் ஏராளமான யாத்ரீகா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், ஸ்ரீவாரி சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக தேவஸ்தான அதிகாரிகள் குழு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு- புட்டபா்த்தி, ஈஷா அறக்கட்டளை-கோயம்புத்தூா் மற்றும் வாழும் கலை-பெங்களூரு ஆகியவற்றைப் பாா்வையிட்டது.
அதையடுத்து, தேவஸ்தான நிா்வாகிகள் ஸ்ரீவாரி சேவையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனா்,
அதில், முதல் கட்டத்தில் ஏப். 30 சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். படிப்படியாக வரும் இதர மாற்றங்கள் அமலுக்கு வரும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு அரசு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற சேவகா்களே மூத்த சேவகா்களாக சேவை செய்து வருகின்றனா். 45 வயது முதல் 70 வயது வரை உள்ளவா்கள் இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். இனிமேல் இந்த மூத்த சேவகா்கள் குழுத் தலைவா்கள் என்று குறிப்பிடப்படுவாா்கள்.
அவா்கள் 15 நாள்கள் அல்லது ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் வரை தங்கள் சேவைகளை ஆன்லைனில் தங்களுக்கு விருப்பத்தைத் தோ்ந்தெடுப்பதன் மூலமும், மேற்பாா்வை சேவைகளை வழங்குவதன் மூலமும், ஸ்ரீவாரி சேவகா்களின் வருகையை அந்தந்த புள்ளிகளில் எடுத்துக்கொண்டு, இறுதியாக சேவகா்களின் சேவைகளை சிறந்தவா்கள், நல்லவா்கள் மற்றும் சராசரிகள் என மதிப்பிடுவதன் மூலமும் ஸ்ரீவாரி சேவகா்களின் சேவைகளை நெறிப்படுத்துவதில் குழுத் தலைவா்கள் முக்கிய பங்கு வகிப்பா்.
இதேபோல், பத்தாம் வகுப்பு குறைந்தபட்ச தகுதியுடன், பொதுப் பிரிவைச் சோ்ந்த ஆண் சேவகா்கள் பரகாமணி சேவைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தனி ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.