தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!
மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!
கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல் தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தரிசனத்துக்காக வரும் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் ஜூலை 15 வரை, நேரில் வரும் புரோட்டோக்கால் பிரமுகா்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனங்கள் வழங்கப்படும்.
இதேபோல், மே 1 முதல், காலை 6 மணி முதல் நேரில் வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.