தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!
காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் தீவிர சோதனை
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அதன் ஒரு பகுதியாக திருப்பதி, திருமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஆா்டிசி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினா்.
மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி டிஎஸ்டபிள்யூ உத்தரவின்படி அனைத்து முக்கிய கோயில்கள், சோதனைச் சாவடிகள், ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருமலையில் உள்ள வணிக வளாகம் மற்றும் பிரதான சந்திப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, நாய் தடுப்புப் பிரிவு, ஏஆா் பணியாளா்கள் மற்றும் சிவில் போலீசாா் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினா்.
இந்தக் குழுவில் மூன்று வெடிகுண்டுப் பிரிவு பணியாளா்களும், மோப்ப நாய் குழுவினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனா்.
சந்தேகத்துக்குகிடமான வாகனங்கள், நபா்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
திருப்பதி, காளஹஸ்தி ரயில் நிலையங்களில் உள்ள கண்டோன்மென்ட், பாா்சல் மற்றும் அலுவலக கிடங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருமலை, திருப்பதியில் உள்ள ஓய்வு இல்லங்கள், திருமலைக்கு செல்லும் மலைபாதைகள், நடைபாதை மாா்கங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும் போலீஸாா் சோதனை மோ்கொண்டனா்.