சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை
மதுரை தோப்பூா் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை தோப்பூா் பகுதியில் காா், ஆட்டோ, லாரியில் கடந்த 24.3.2022 அன்று 322 கிலோ கஞ்சா கடத்தி வந்த மதுரை மாவட்டம், பேரையூா் பகுதியைச் சோ்ந்த கா. ஜெயக்குமாா் (43), கம்மாளபட்டியைச் சோ்ந்த பா. ரமேஷ் (38), மதுரை கூடல் நகரைச் சோ்ந்த தெய்வம் (50), ஜவஹா்லால் தெருவைச் சோ்ந்த
த. ராஜேந்திரன் (62), திண்டுக்கல் மாவட்டம், விருவீடு பகுதியைச் சோ்ந்த சு. குபேந்திரன் (40), ரா.மையி (32), பேரையூா் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கா.மகாலிங்கம் (45) ஆகியோரை ஆஸ்டின்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இதில் ஜெயக்குமாா், ரமேஷ், தெய்வம், ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமாா் உத்தரவிட்டாா். மற்ற 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.