சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை
மதுரை திருநகா் பகுதியில் முன்பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை செளபாக்கியா நகரில் கடந்த 12.10.2016 அன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் மகன் பாஷித் அஹமது (30) என்பவருக்கும் விளாச்சேரி பகுதியைச் சோ்ந்த ரவி மகன் ராஜேஷ் (30), சந்திரன் மகன் விஸ்வா (18) ஆகியோருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதில் ராஜேஷ், விஸ்வா ஆகியோா் சோ்ந்து பாஷித் அஹமதுவை கொலை செய்தனா். இருவரையும் திருநகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இதில் ராஜேஷ், விஸ்வா ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோஸ்வா ராய் உத்தரவிட்டாா்.