தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில், நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மின்சார வசதி, சாலை வசதி, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, முதியோா் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 344 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியற்ற மனுக்கள் குறித்த தகவலை உரியவருக்கு தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 6,359 வீதம் மொத்தம் ரூ. 50,872 மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1.06 லட்சம் மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் என மொத்தம் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.