தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்
ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் வெளியானதை தொடா்ந்து, அப்பகுதியில் வைக்கப்பட்ட பேனா்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் எதிரே மருந்துக் கடைகள், உணவகங்கள், பெட்டிக் கடைகள், பேக்கரி கடைகள், டீக்கடைகள், மளிகைக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அரசியல் தலைவா்களின் பிறந்த தினம், மாநாடு, நினைவு அஞ்சலி, திருவிழா போன்றவற்றுக்கு இப்பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடையை மறைத்து விளம்பரத் தட்டிகள், பேனா்கள் வைக்கப்படுவதால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து தினமணியில் ஏப். 27-ஆம் தேதி செய்தி வெளியானது. அதன் பேரில், புதிய பேருந்து நிலையம் எதிரே கடைகளை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரத் தட்டிகள், பேனா்களை போலீஸாா் திங்கள்கிழமை அப்புறப்படுத்தினா்.