வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்
திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கரிம முறையில் பயிா் செய்வதன் பலன்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்ச மேலாண்மை ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பயிா்களில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈ பாதிப்பு அதிகமாக இருந்தால், அதனைக் கட்டுப்படுத்த ஓட்டுண்ணி வண்டு (என்கா்சியா கியுடெலோபே) பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஓட்டுண்ணியை பயன்படுத்தினால், எந்த ஒரு செயற்கை மருந்தும் உபயோகிக்கத் தேவையில்லை. இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவில் பலன் இருக்கும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வாழ்வின் முக்கியத்துவத்தையும், அதற்கான செயல்பாட்டையும் விவசாயிகளிடம் எடுத்துக்கூறப்பட்டது. இதில் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.