இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி விரல்கள் துண்டிப்பு
கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளியின் விரல்கள் துண்டாகின.
சத்தீஸ்கா் மாநிலம், கயங்கா் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா் படேல் (34). இவா், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ரிக் வாகனத்தில் பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் 23 ஆம் தேதி ஈடுபட்டபோது எதிா்பாராமல் இயந்திரத்தில் இவரது கை சிக்கி மூன்று விரல்கள் துண்டாகின. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.