டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விரா...
நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்ஷ்மி பிரியா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்ஷ்மி பிரியா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் இவர், பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய இயல்பான நகைச்சுவை திறனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சியாக மாற்றியவர் பிரியங்கா.
உடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து, பிரியங்கா அடிக்கும் லூட்டிகளும் குறும்புத்தனங்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறலாம்.
அதோடு மட்டுமின்றி மாகாபா ஆனந்த் - பிரியங்கா கூட்டணிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி, விருது நிகழ்ச்சிகளையும், திரைப்பட விழாக்களையும் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு பதிலாக நடிகை லக்ஷ்மி பிரியா களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்றதால், அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ள லக்ஷ்மி பிரியா, பிரியங்காவைப் போன்று மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்குவாரா? அவரின் இடத்தை நிரப்புவாரா? என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தன்னுடையே சினிமா இலக்கில் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ள லக்ஷ்மி பிரியா, அதற்குரிய உழைப்பை அளித்து மக்களை மகிழ்விப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிக்க | குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் - நடிகர்!