உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!
96 - 2 படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!
பி.சி.ஸ்ரீராம் 96 - 2 படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.
96 படத்தைப்போல மனித உறவுகளை அழகாகக் கையாண்ட திரைப்படமாக மெய்யழகன் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
தற்போது, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - த்ரிஷாவை வைத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் 96 இரண்டாம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பிரேம் குமாரின் மென்மையான உணர்ச்சிகளுக்கு பி.சி. ஸ்ரீராம் எனென்ன ஒளியமைப்புகளைச் செய்வார் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்ஷ்மி பிரியா!