செய்திகள் :

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

post image

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து சுமார் 50 லட்சம் மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

MyV3Ads நிறுவனம்

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டன. அதனடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அதன் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன், விஜய ராகவன் ஆகியோரைக் கைது செய்தனர்.

ஆப் முடக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து பணம் கொடுக்காமல் இருந்து வருகிறது. இதையடுத்து, MyV3Ads நிறுவனம், பொது மக்களிடம் முதலீட்டுத் தொகை பெற்று ஏமாற்றியது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளிக்கலாம் என்று காவல்துறை  ஏற்கெனவே கூறியிருந்தது. இன்று தெலங்கானா மாநிலத்தில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “MyV3Ads நிறுவனத்தில் தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து மாவட்ட மக்களும் ஏமாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காத பொது மக்கள், உடனடியாக கோயமுத்தூர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில்,

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் நேரில் வந்து துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம்.” என்று கூறியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்ற... மேலும் பார்க்க

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழ... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக ... மேலும் பார்க்க

Canada: திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த SUV கார்; பலர் பலி, ஏராளமானோர் படுகாயம் - நடந்தது என்ன?

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழை... மேலும் பார்க்க