Pahalgam: 2026 - தயாராகும் DMK - சவால்விடும் EPS | Imperfect Show
இந்தியா போர் தொடுத்தால்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்! கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை!!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால், அதற்கெல்லாம் பாகிஸ்தான் மக்கள் அஞ்சுவதாகத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தொடர்பாக மரண மீம்ஸ்களைப் போட்டு அந்நாட்டு மக்களே, அந்நாட்டு அரசை மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் யாராவது ஒருவர் போர் பற்றி ஏதேனும் வாய் திறந்தால் போதும்.. வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள் பாகிஸ்தான் குறித்து விமர்சிக்க.
இப்படித்தான், அக்ரமா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் போர் தொடுப்பதாக இருந்தால் 9 மணிக்குள்ளாக முடித்துவிடுங்கள். பாகிஸ்தானில் 9.15 மணிக்கு மேலே கேஸ் விநியோகமே நின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மிகவும் ஏழ்மையான நாட்டின் மீது இந்தியா தாக்குதல் நடத்தப் போகிறது என்பது அந்த நாட்டுக்குத் தெரிந்திருக்குமா என்றும் சிலர் கருத்திட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஏற்கனவே, இங்கு எதுவுமே இல்லை. மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள். ஒருவேளை, லாகூரைக் கைப்பற்றினால் கூட, நிலைமையைப் பார்த்ததும் இந்தியா அரை மணி நேரத்தில் அதனை மீண்டும் விட்டுவிட்டுப் போய்விடும் என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

மற்றும் ஒருவர் பதிவிட்டிருப்பதுதான் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது, பல உலக நாடுகளுக்கு நாம் கடன் தர வேண்டியிருக்கிறது. எனவே நம் மீது போர் தொடுக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், நாம் இருந்தால்தானே கடனைத் திருப்பிக் கொடுக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும் என ஒருவர் பதிவிட,
இதற்கு பதிலாக, நமது அரசே, கொடுக்க வேண்டிய கடனை எல்லாம் பார்த்து பயந்து, இந்தியாவே நாட்டை எடுத்துக்கொள்ளட்டுமே என்று கூட விட்டுவிடும் என்று கருத்திட்டுள்ளார்.
கொல்லப்போகிறீர்களா? ஏற்கனவே எங்க அரசு எங்களைக் கொன்றுகொண்டுதான் இருக்கிறது, என்றும் திடிரென வெடிச் சப்தம் கேட்டதால் என்ன இந்தியா குண்டுவீசிவிட்டதா என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட, அந்த அளவுக்கு இந்தியாவுக்கு விவரம் இல்லாமல் இருக்காது, இது டிரான்ஸ்பார்மர் என பதிலளிக்க, அதற்கு மற்றொருவர், இந்தியாவுக்கு விவரம் இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.