செய்திகள் :

Vaibhav Suryavanshi: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த பீகார் முதலமைச்சர்!

post image

IPL 2025 நேற்றைய போட்டிக்குப் பிறகு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

இந்த சீசனின் அதிவேக அரைசதம் (17 பந்துகளில்), டி20 வரலாற்றில் குறைந்த வயதில் சதம், குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

அவர் அடித்த 101 ரன்களில் 93% ரன்கள் பௌண்டரிகள் மற்றும் சிக்சர்களில் இருந்தே வந்தன. சதமடிக்கத் தேவைப்பட்ட 35 பந்துகளில் 11 சிக்சர்கள் மற்றும் 7 பௌண்டரிகளை விளாசியுள்ளார்.

சூர்யவன்ஷியின் ஆட்டத்தை மாற்றிய அதிரடியை புகழ்ந்து, அவருக்கி ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.

2024ம் ஆண்டு சூர்யவன்ஷியை சந்தித்த புகைப்படத்தப் பகிர்ந்த அவர், அவரது எதிர்காலத்துக்காக அவரை வாழ்த்தியுள்ளார்.

பீகார் மாநிலம், சமட்சிபூரைச் சேர்ந்தவர் சூர்யவன்ஷி. தனது 12 வயதில் பீகாருக்காக ரஞ்சி டிராபியில் களமிறங்கி தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அதுதான் அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது.

"எதிர்காலத்தில் நாட்டுக்கு பெருமைசேர்ப்பார்" - நிதிஷ்குமார்

சூர்யவன்ஷியின் சாதனைக்குப் பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் நிதிஷ் குமார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர் (14 வயது) என்ற சாதனையப் படைத்துள்ள பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பாலும் திறமையாலும் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார். அனைவரும் அவரைப்பார்த்து பெருமைபடுகின்றனர்.

நான் 2024ம் ஆண்டே முதலமைச்சர் இல்லத்தில் அவரையும் அவரது தந்தையையும் சந்தித்து, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக வாழ்த்தினேன்.

ஐபிஎல்லில் அவரது புத்திசாலித்தனமான ஆட்டத்துக்குப் பிறகு அவரை போனில் வாழ்த்தினேன்.

மாநில அரசு இளம் வீரர் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் கௌரவ ஊக்கத்தொகையை வழங்கும். எதிர்காலத்தில் அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைச் செய்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

சூர்யவன்ஷிக்கு உலகம் முழுவரும் கிரிக்கெட் வீரர்களும் பிரமூகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் அவரை பாராட்டி மீம்ஸ்கள் பதிவிடுகின்றனர்.

"என் பெற்றோர்தான் காரணம்" - Vaibhav Suryavanshi

இளம் வயதில் சூர்யவன்ஷி படைத்துள்ள இந்த சாதனைகளுக்கு அவரது பெற்றோர்களே முக்கிய காரணமாக இருந்துள்ளனர். தனது விளையாட்டுக்காக பெற்றோர்கள் செய்த கடின உழைப்பு குறித்து சூர்யவன்ஷி பேசியுள்ளார்.

"நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதற்காக என் பெற்றோருக்கு கடமைபட்டுள்ளேன். என் பயிற்சிக்காக என் அம்மா அதிகாலையில் எழுந்து எனக்கு உணவு செய்வார். அவர் வெறும் 3 மணிநேரமே உறங்குவார்.

என் அப்பா எனக்காக வேலையை விட்டுவிட்டார், இப்போது என் அண்ணன்தான் அதைப் பார்த்துக்கொள்கிறான். நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டோம்.

என் அப்பா எனக்கு ஆதரவாக இருந்து, என்னால் இதை அடையமுடியும்னு சொன்னார். இன்று என்ன பலன் தெரிந்தாலும் அதற்கு காரணம் என பெற்றோர்தான் காரணம்." எனக் கூறியிருக்கிறார்.

IPL 2025 : பட்டையைக் கிளப்பும் Uncapped பிளேயர்ஸ்; தயாராகும் எதிர்கால இளம்படை | Uncapped 11

இன்றைய தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் மிகப் பெரும் பாதையை ஏற்படுத்தித்தரும் ஊடக வெளிச்சம் மிக்க தொடராக இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஹால், குல்தீப்... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: ``வைபவ் ஆட்டத்துக்குப் பின்னால் இருக்கும் இந்த 4 விஷயங்கள்'' - புகழும் சச்சின்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் காணாத ஒரு ஆட்டத்தை 14 வயது சிறுவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற குஜராத் vs ராஜஸ்தான் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜரா... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'வைபவ்வை சச்சினோடு ஒப்பிடாதீர்கள்! - ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர்

'ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அதில், ராஜஸ்தானை சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் ச... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'எனக்கு எந்த பயமும் கிடையாது!' - சதத்தைப் பற்றி வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயதே ஆன சிறுவரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்திருந்... மேலும் பார்க்க

RR v GT: ஆட்டம் காட்டிய 'பாஸ் பேபி' சூர்யவன்ஷி, அரண்டு போன குஜராத்! - என்ன நடந்தது?

தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள்... கேப்டன் சஞ்சு சாம்சன் காயம்... வெற்றிபெற்றிருக்க வேண்டிய 2 போட்டிகளைக் கோட்டை விட்டது என சுழலில் சிக்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று தோற்றால் மொத்தமாக பிளே-ஆஃப் க... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது சிறுவன்

'அசத்தல் வைபவ் சூர்யவன்ஷி!''Everyone is a spectator here!' இந்த வர்ணனைதான் கமெண்ட்ரியில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. ஆம், வைபவ் சூர்யவன்ஷி ஒற்றைக் காலை க்ரீஸூக்குள் ஊன்றி அடித்த பெரிய சிக்சர்களும... மேலும் பார்க்க