செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
அனுபமாவின் கிஷ்கிந்தபுரி கிளிம்ஸ் விடியோ!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிஷ்கிந்தபுரி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளம், தமிழைவிட தெலுங்கில் பிஸியாக நடித்துவரும் அனுபமா தற்போது கிஷ்கிந்தபுரி படத்தில் நடித்துள்ளார்.
பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் நாயகனாவும் அனுபமா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை கௌசிக் பெகல்லபதி இயக்கியுள்ளார்.
ஷைன் ஸ்கிரீன் பேனர் சார்பில் சாஹு கிரகபதி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் மழைக்காலத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அனுபமா நடிப்பில் வெளியான டிராகன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அனுபமா நடிப்பில் பரதா, லாக்டௌவுன், ஜேஎஸ்கே, பைசன் , பெட் டிடெக்டிவ் என வரிசையாக பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.