செய்திகள் :

தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!

post image

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிரணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதியது.

கொழும்புவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இருவரும் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு தெறிக்கவிட்டனர்.

முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அவருக்குப் பின்னர் வந்த ஹார்லீன் தியோல் 29 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 24 ரன்களிலும், தீப்தி சர்மா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

ஆட்டம் முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 41 ரன்களிலும், கஷ்வீ கௌதம் 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா வகையில் 13 ரன்கள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்க தரப்பில் ம்லபா 2 விக்கெட்டுகளும், அயோபோங்கா, மசபாடா, நடினே, ட்ரெக்‌ஷன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சதம் விளாசிய தஸ்மின்..

பின்னர், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் லாரா மற்றும் தஸ்மின் இருவரும் வலுவான தொடக்கம் கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில் லாரா 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற லாரா கூடால் 9 ரன்களிலும், கரபோ மேசோ 7 ரன்களிலும், ட்ரெக்சன் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் அனைவரும் ஸ்னே ராணாவில் சுழலில் சிக்கினர்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் விளையாடிய தஸ்மின் சதம் விளாசி அசத்தினார். இருந்தாலும் அவரால் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 107 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்த தஸ்மின் பெவிலியன் திரும்பினார்.

49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 261 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அசத்தலாகப் பந்து வீசிய ஸ்னே ராணா 5 விக்கெட்டுகளை அள்ளினார். அருந்ததி, சரணி, தீப்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்னே ராணா ஆட்டநாயகி விருதைக் கைப்பற்றினார்.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!

இலங்கை முத்தரப்பு தொடர்: இந்திய மகளிரணிக்கு அபராதம்!

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய மகளிரணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற மகளிர் முத்தரப்புத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை... மேலும் பார்க்க

சதமடித்த ஷாத்மன் இஸ்லாம்: வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்... மேலும் பார்க்க

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா நிதான ஆட்டம்!

கொழும்பு: இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 29) தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்கா... மேலும் பார்க்க

தைஜுல் இஸ்லாம் அபார பந்துவீச்சு; முதல் நாளில் ஜிம்பாப்வே 227 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட... மேலும் பார்க்க

முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பி... மேலும் பார்க்க

இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு சவாலளிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இங்கில... மேலும் பார்க்க