செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அறுவைச் சிகிச்சை!
ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர். சிறந்த டிஃபெண்டராக அறியப்படும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்கு விளையாடி வருகிறார்.
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தின்போது ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர், வினிசியஸ் ஜுனியர் நடுவரின் மீது பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் தூக்கி வீசுவார்கள்.
நடுவரைத் தாக்கில் 2 ஆண்டுகள் அல்லது 10-12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பின்னர், இதற்காக மன்னிப்புகோரி ரூடிகர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறுவைச் சிகிச்சை செய்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
7 மாதங்களுக்கும் அதிகமாக கடுமையான வலியுடனே விளையாடி வந்தேன். மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்வதை முற்றிலும் எதிர்பாராத தவிர்க்க இயலாத ஒன்று. தற்போது, வலியின்றி இருக்கிறேன்.
மருத்துவக் குழுவுக்கு நன்றி. முக்கியமாக ரியல் மாட்ரிட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு மிக்க நன்றி.
நேஷ்னல் லீக், கிளப் கால்பந்து உலகக் கோப்பை என இரண்டு பெரிய தொடர்கள் இருக்கின்றன. விரைவில் குணமடைந்து இந்தப் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு வாரம் எவ்வளவு முன்னேறுகிறேன் என்பதை கவனிக்க வேண்டும்.
விரைவில் குணமடைய என்னால் முடிந்ததைச் செய்வேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். உங்கள் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.