செய்திகள் :

Travel Content : கடைசிப் பயணமா இருக்கும்னு நான் நினைக்கல! - கமுதி பயணும், தீரா வலியும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கொரோனா காலம் முடிந்ததிலிருந்துதே கடந்த 5 வருடமாக நாங்கள் வெளியூர்களில் நடந்த எந்த விஷேசங்களுக்கும் செல்ல இயலவில்லை. முக்கியமான விஷேசங்களுக்குமே ஏதாவது ஒரு வகை பணப்பற்றாக்குறை அல்லது வீட்டில் யாரேனும் ஒருவரின் உடல் நலம் கருதி செல்ல முடியாமலே இருந்தது.

கடந்த நவம்பர் மாதம் என் மூத்த அக்காவின் இளைய மகனின் திருமணம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்றது, அதில் அனைத்து உறவினர்களுமே கலந்து கொண்டனர் . ஆனால் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

சரி திருமணத்திற்கு தான் போகவில்லை , அடுத்து சென்று வரலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தோம். அதற்குள் என் மூத்த மகனுக்கு வேலைக்காக கால் லெட்டர் வந்தது. அவனை சென்னை அனுப்புவதற்கு பணம் புரட்ட வேண்டியது இருந்தது. அதனால் அடுத்தும் கமுதி செல்லவில்லை. ஒரு வழியாக டிசம்பர் 21 -ம் தேதி என் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

அதற்குபின் ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை ஒட்டி கமுதி செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

என் மகன் பொங்கல் விடுமுறைக்கு வந்து விட்டு 3 நாட்கள் கழித்து சென்னை சென்று விட்டான். ஜனவரி 17-ம் தேதி அக்காவுக்கு போன் செய்து மாப்பிள்ளையும் பொண்ணும் எங்கு இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

அவர்கள் விடுமுறைக்கு வந்திருப்பதாகவும் விடுமுறைக்குப்பின் மாப்பிள்ளையும் பொண்ணும் பெங்களூருக்கு சென்று விடுவார்கள் என அக்காவும் மாமாவும் கூறினார்கள். சரியென்று ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கமுதிக்கு நானும் என் கணவரும், இளைய மகனும் கிளம்பினோம்.

ஒரே நாளில் சென்று விட்டு மறுநாள் ஊர் திரும்ப வேண்டும், என்ற நோக்கில் கிளம்பினோம். ஏனெனில் என் இளைய மகனுக்கு திங்கட்கிழமை செமஸ்டர் தேர்வு எழுத வேண்டி இருந்தது. அவன் தேர்வு முடிந்து விடுமுறையில் போகலாம் என்றான் . ஆனால்

எனக்கோ ஊருக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் மாப்பிள்ளையும் பெண்ணையும் பெங்களூரு போய் பார்க்க வேண்டுமாய் இருக்கும்.

எனக்கு சின்ன வயதில் இருந்தே கமுதின்னா மிகவும் பிடிக்கும். ஊரில் சிறப்பே காலை நேரத்தில் கிடைக்கும் கசறா தான். கோவையில் எப்படி காலை நேரத்தில் வரிக்கி அல்லது தேங்காய் பன் சாப்பிடும் பழக்கம் உள்ளதோ, அதைப்போல் கமுதியில் காலையில் டீக்கடைகளில் கிடைக்கும் பலகாரம் கசறா, லேசான இனிப்பு சுவையில் மைதா மாவினால் செய்யப்படும் இதை சூடான டீயில் முக்கி சாப்பிடும் போது மேலும் சுவையாக இருக்கும்.

ஜனவரி 17-ம் தேதி இரவு

நான் 'போலாம்'னு சொன்ன உடனேயே என் கணவரும் உடனே கிளம்பலாம் என்றார். மூவரும் ஒரே ஒரு செட் துணி மட்டும் பேக் செய்து கிளம்பினோம் . கிளம்பும் போதே என் மகன் சோர்வாக இருந்தான். மதுரை பஸ் ஏறிய சிறிது நேரத்தில் அவன் தூங்கிவிட்டான். நானும் அவரும் நெடுநாள் கழித்து பேருந்து பயணம் மேற்கொண்டதால் மிகவும் சுவாரசியமாக பல விஷயங்களை பேசிக் கொண்டே இருந்தோம்.

இரவு நேரமாக இருந்ததால் பஸ்ஸில் அதிகபட்சமாக அனைவரும் தூங்க ஆரம்பத்திருந்தார்கள். எனக்கும் கணவருக்கும் ஏனோ தூக்கமே வரவில்லை. எத்தனையோ ஊர்களுக்கு எத்தனையோ முறை பயணம் செய்திருக்கிறோம். ஆனால் இந்தப் பயணம் ஏனோ மனதில் மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது .

 இரவு 11:30 மணிக்கு எடுத்த பஸ் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் மதுரையை வந்தடைந்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டான்டீ கடையில் டீ குடித்துவிட்டு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறினோம். பின்பு மாட்டுத்தாவணியில் இருந்து 5.30 மணியளவில் கமுதி பஸ்சில் ஏறினோம் ‌.

ஏனோ என் மனதில் உற்சாகம். கமுதியை நெருங்க நெருங்கவே பழைய ஞாபகங்கள் பற்றி இருவரும் பேசிய வண்ணம் இருந்தோம் . காலை 7 மணிக்கு மாமாவிற்கு போன் செய்து கசறா வாங்கி வைக்க சொன்னேன். ஏனென்றால் கடைகளில் கசறா சீக்கிரம் காலியாகிவிடும் . காலை 7.45 மணிக்கெல்லாம் கமுதி வந்து இறங்கி மூவரும் அக்கா வீட்டிற்கு நடந்தே சென்றோம்.

கமுதி முன்பு போல் இல்லாமல் நன்கு டெவலப் ஆகி இருந்தது.

அக்கா வீட்டிற்க்கு சென்றவுடனே அக்காவைக் கட்டி அணைத்து முத்தமிட்டேன். அனைவருடனும் பேசி சிரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். டீ, கசறா சாப்பிட்டு சிறிது நேரத்தில் காலை டிபன் சாப்பிட்டோம் .

அக்கா, மாமா, அக்காவின் மூத்தமகன், மருமகள், பேரன், இளையமகன், மருமகள், எல்லோருடனும் அரட்டை அடித்துவிட்டு மாமாவின் வண்டியை எடுத்துக் கொண்டு நானும் என் கணவரும் பூ, ஸ்வீட் வாங்க சென்றோம்.

'உனக்கு எங்கேயாவது போகணுமா' என அவர் கேட்டார். 'போதும் இந்த ஊர்ல இவ்வளவு தான் ரவுண்டு அடிக்க முடியும்'னு சிரிச்சுட்டே சொன்னேன்.

வீட்டிற்க்கு வந்து அவர் சற்று ஓய்வெடுத்துக் கொண்டார். எனக்கு பஸ் பயணத்தின் களைப்பே தெரியவில்லை. என் கணவர், 'இங்கே இருந்தாலே உனக்கு உடம்புல எந்தப் பிரச்சினையும் வராது போல' என்றார். நான் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காகவே அவரும் என் மகனும் சந்தோசமாகவே உடனிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் பேசி, பேரனுடன் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே மருமகள் சமைக்க தொடங்கிவிட்டாள். என் அக்கா என்னை தூங்கும்படி சொன்னார், நானோ 'தூங்குனா உன்கூட பேசும் நேரம் கம்மியா இருக்கும்,நிறைய பேசலாம்' என்று சிரிச்சுட்டே சொன்னேன் .

அன்று சனிக்கிழமை என்பதால் சைவ சமையலே அனைவரும் சாப்பிட்டோம் . 'மருமகள் கையில் சாப்பிட ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்', என என் கணவர் கூறினார். அனைவரும் சாப்பிட்டு சற்று நேரத்தில் அக்காவின் மகன்கள் இருவரும் வேறு ஒரு கல்யாணத்துக்காக அருப்புக்கோட்டை செல்ல கிளம்பினார்கள்.

நாங்களும் இரவே கிளம்ப வேண்டுமென்று சொன்னோம். ஆனால் மாமாவோ இரண்டு நாட்களாவது இருந்து விட்டு போக சொன்னார். எனது மகனின் தேர்வு திங்கட்கிழமை எழுத வேண்டி இருப்பதால் அன்று இரவே

அனைவருக்கும் பிரியா விடைகொடுத்து கிளம்பி விழியோரம் வந்த கண்ணீரை துடைத்து விட்டு நானும் என் அக்காவும் கட்டி அணைத்துக் கொண்டோம்.

சனிக்கிழமை இரவு 8 மணி கமுதியில் இருந்து மதுரை பஸ் ஏறினோம். 11 மணி அளவில் மதுரை வந்து இரவு டிபன் சாப்பிட்டுவிட்டு 12 மணிக்கு கோவைக்கு பஸ் ஏறினோம். விடியற்காலை 5:30 மணிக்கெல்லாம் கோவை வந்துவிட்டோம்.

சித்தரிப்புப் படம்

இந்த பயணம் என்னவோ ஒரேநாள் தான், ஆனால் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம். காரணம் நாங்கள் சென்று வந்து ஒரே வாரத்தில் , ஜனவரி 25 சனிக்கிழமை காலையில் என் கணவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சற்றும் எதிர்பாராத உயிரிழப்பு எங்களுக்கு.

இந்தப் பயணம் நாங்கள் ஒன்றாக சென்ற கடைசிப் பயணமாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை . வாழ்க்கையில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று தெரியவில்லை ! .முதல் வாரத்தில் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் ஊரில் இருந்தோம். மறு வாரம் அனைவரும் மிகுந்த சோகத்தில் கோவையில் எங்கள் இல்லத்தில். இதற்கு மேல் எழுதுவதற்கு மன தைரியம் இல்லை.

-ராஜலட்சுமி ரவிக்குமார்

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest : வரலாற்று உணர்வை தூண்டியப் பயணம்! - சேரம்பாடி, பழசி குகை அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : மண்ணில் படுத்துப்புரண்ட பக்தர்கள்! - கிருஷ்ணர் வளர்ந்தது இங்குதானா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : இந்தியாவில் இருப்பது போல் தோன்றியது! - நெதர்லாந்து நினைவலைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' - உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel contest: அந்தமான் யானை கதை தெரியுமா? ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு ரகம்; அந்தமான் சுற்றுலா அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : ஆடி அமாவாசைக்கு கயாவில் தர்ப்பணம்! - அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க