விருது பெற்றதில் மகிழ்ச்சி; அனைவருக்கும் நன்றி: அஜித் குமார்
சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!
சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 22 பேர் பலியானகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படாத நிலையில் அந்நாட்டு அதிபர் ஸி ஜிங்பிங் படுகாயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சீனாவில் இம்மாதத்தில் (ஏப்ரல்) இரண்டாவது முறையாக தீ விபத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. முன்னதாக, கடந்த ஏப்.9 ஆம் தேதியன்று ஹெபெய் மாகாணத்திலுள்ள காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 முதியவர்கள் பலியாகினர்.
செங்டே நகரத்தில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகத்தில் 39 முதியவர்கள் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!