செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
சத்தீஸ்கர்: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு மேயர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட அம்மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் முதல்வர் விஷ்னு தியோ சாய்யின் அறுவுறுத்தலின்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 தேர்வர்கள் தேர்ச்சிப் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.
அதில், ராய்ப்பூரைச் சேர்ந்த பூர்வா அகர்வால் (65வது இடம்), முங்கேலியின் அர்பன் சோப்ரா (313 வது இடம்), ஜக்தாபூரின் மான்சி ஜெயின் (444வது இடம்), அமிபிகாப்பூரின் கேஷவ் கார்க் (496வது இடம்) மற்றும் சாச்சி ஜெய்ஸ்வால் (654 வது இடம்) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், மேல் கூறப்பட்டுள்ள தேர்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இளம் தலைமுறையினரை ஊக்கிவிக்க அரசின் முயற்சியாக இந்த தேர்ச்சிப் பெறும் தேர்வர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!