செய்திகள் :

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

post image

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.

மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோனது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார்.

தோல்விக்கு பொறுப்பேற்பு

கனடா பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், இந்திய நேரப்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் அக்கட்சியின் தலைவர் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பர்னபி சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், வெறும் 9,100 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார்.

காலிஸ்தான் தலைவராக முன்னிறுத்தப்பட்ட ஜக்மீத் சிங், தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது புதிய ஜனநாயகக் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள புதிய 343 இடங்களில் குறைந்தது 12 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே கட்சி அந்தஸ்து கிடைக்கும். இதனால், கட்சி அந்தஸ்தும் பறிபோகியுள்ளது. கடந்த தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்ற புதிய ஜனநாயகக் கட்சி, ஆளும் லிபரல் கட்சிக்கு ஆதரவளித்திருந்தது.

இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

“புதிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்தியதும் பர்னபி சென்ட்ரல் தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியதும் என் வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதையாக கருதுகிறேன்.

பிரதமர் மார்க் கார்னிக்கு வாழ்த்துகள். இந்த இரவு புதிய ஜனநாயகக் கட்சியினருக்கும் ஏமாற்றமளித்திருக்கும் என்பதை நான் அறிவேன்.

அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாம் எப்போதும் பயத்தைவிட நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்போம் என்பது எனக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைக் குற்றம்சாட்டியவர்

நிஜ்ஜாா் கொலை தொடா்பாக இந்தியா மீது கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

அப்போது, நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடா்பு உள்ளதற்கு வலுவான ஆதாரம் உள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை ஆளும் கூட்டணிக் கட்சியின் எம்.பி.யான ஜக்மீத் சிங் முன்வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஜஸ்டின் செயல்படுவதால் லிபரல் கட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்தாண்டு ஜக்மீத் சிங் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கனடா பிரதமராகும் மார்க் கார்னி! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க

இந்தியா போர் தொடுத்தால்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்! கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.ஆனால், அதற்கெல்... மேலும் பார்க்க

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் க... மேலும் பார்க்க

கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம்: சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தோலுரித்த இந்தியா!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் என்று கடுமையான சொற்களால் ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் ’வோட்டான்’ என்படும் பயங்கரவாதத் தொடர்பு குழுக்களால் பாதிக்கப்பட்டோர... மேலும் பார்க்க