சீன உணவகத்தில் தீ: 22 போ் உயிரிழப்பு
சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.
அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்தாலும், விபத்துக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்த விபத்து தொடா்பாக உணவகத்தின மேலாளரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவப் பகுதியில் மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்.