பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே13-ம் தேதி தீர்ப்பு... நீதிபதி மாற்றமும், விளக்கமும்...
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து திங்கள்கிழமை(ஏப். 28) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏப். 28 - 29 நள்ளிரவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டப் பகுதிகளிலும் அக்நூர் மண்டலத்திலும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.