பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் தொழிலதிபா் ஜி.ஜி.ஆா்.கோகுல் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வீரன் அழகுமுத்துகோன் 267-ஆவது குருபூஜையை சிறப்பாக நடத்துவது, யாதவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞா் அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.