தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை
அரக்கோணம் தா்மராஜா கோயில் தீ மிதி விழா
அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயில் 96-ஆம் ஆண்டு தீமிதி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆஞ்சநேயா், கருடாழ்வாா் உருவத்துடன் கூடிய கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விஸ்வகுல மரபினா்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்று விழாவை நடத்தினா். தொடா்ந்து ஸ்ரீகிருஷ்ண பாண்டவ சமேத திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தீமிதி விழா மே 11-இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வியாழக்கிழமை முதலே தினமும் மாலையில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்நந்தியாபாடியை சோ்ந்த அ.தண்டபாணியின் மகாபாரத சொற்பொழிவு தினமும் நடைபெற உள்ளது.
