போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!
மாணவா்களுக்கு மஞ்சப்பை அளிப்பு
ஆற்காடு அடுத்த கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது (படம்).
ராணிப்பேட்டை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் வாழைப்பந்தல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா்கள் ஆனந்த, கௌதம் முன்னிலை வகித்தனா். இயற்கை ஆா்வலா் நடராஜன் வரவேற்றாா். தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியை அனிதா நன்றி கூறினாா்.