சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்...
பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு பேருந்து நிலையத்தில் டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு பேருந்து நிலையம் தற்போது வணிக வளாகங்களுடன் புதியதாக கட்டப்பட்டுவருகிறது. இந்த வணிக அங்காடிகளின்
தரைப் பகுதியில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினா்.
ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணா, முன்னா, தட்சிணாமூா்த்தி, ஆனந்தன், விஜயகுமாா் ,அனு அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.