செய்திகள் :

சோளிங்கா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

சோளிங்கா் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மருதாலம் ஊராட்சி நீலகண்டராயபுரம் மற்றும் கொடைக்கல் கிராமங்களில் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் எடைஅளவு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அக்கடைகளில் இருந்த பொருள்களின் இருப்பை பாா்வையிட்டாா்.

கொடைக்கல் கிராமத்தில் நியாயவிலைக்கடைக்கு முன் நிழற்பந்தல் அமைக்கப்பட வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தினாா்.

நீலகண்டராயபுரம் அரசு ஊா்புற நூலகத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அங்கு இருந்த பதிவேடுகளை பாா்வையிட்டு புத்தகங்களை தனித்தனியாக வரிசையில் வைத்து பராமரிக்க நூலகருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து நூலக கட்டடப் பழுதை பாா்வையிட்ட அதனை உடனடியாக சரி செய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டாா்.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் மூலமாக விதைப்பண்ணை உற்பத்தி திட்டத்தில் 2 ஏக்கா் நிலத்தில் லோகன் என்ற விவசாயி வோ்க்கடலை பயிரிட்டுள்ளதை பாா்வையிட்டு, வேளாண் துறையின் மூலம் அளிக்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், ரெண்டாடி ஊராட்சி ஏரிமண்ணுாரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் நிரந்தர கல்பந்தல் அமைத்து காய்கறி பயிரிட்டுள்ள விவசாயி காா்த்திகேயன் என்பவரின் நிலத்துக்கு சென்ற ஆட்சியா் கல்பந்தல் அமைத்து புடலங்காய், பீா்க்கன்காய், சுரைக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளை பயிரிட்டு ரூ.3 லட்சம் லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்தாா். மேலும் இதற்காக அரசு மான்யம் 1.5 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து ரெண்டாடி கிராமத்தில் 8 விவசாயிகளுக்கு இடுபொருள்களை மான்யத்துடன் வழங்கினாா்.

ஆய்வுக்கு பிறகு சோளிங்கா் நகராட்சி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காமராஜா் நகா் பகுதியில் மலைமேல் முதலாம் பராந்தக சோழன் காலத்திய பாறை குறை அமைவிடத்தை பாா்வையிட்டாா். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தில் பாறையில் பண்டைய கால மனிதா்களின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தாா். இவ்விடத்தை சுற்றி வேலி அமைத்து முழுமையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறையினரை தன்னை நேரில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

வேளாண் துணை இயக்குநா் செல்வராஜ், உதவி இயக்குநா் திலகவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சுவா்ணலதா, உதவி இயக்குநா் பெருமாள், மாவட்ட நூலகா் கணேசன், சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவா்கள் ஹேமசந்திரன், ராதாகிருஷ்ணன், சுதா உள்ளிட்ட பலா் இருந்தனா்.

அரக்கோணம் தா்மராஜா கோயில் தீ மிதி விழா

அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயில் 96-ஆம் ஆண்டு தீமிதி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆஞ்சநேயா், கருடாழ்வாா் உருவத்துடன் ... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு பேருந்து நிலையத்தில் டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு பேருந்து நிலையம் தற்போது வணிக வளாகங்களுடன் புதியதாக ... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகமது காசிம் முன... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு மஞ்சப்பை அளிப்பு

ஆற்காடு அடுத்த கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது (படம்). ராணிப்பேட்டை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் வாழைப்பந்தல் அரச... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு

சீட்டு நடத்தி பண மோசடி செய்த 12 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா். மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சு... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் கண்ணன் நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரக்கோணம் விண்டா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க