நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
கும்பகோணத்துக்கு காரில் வியாழக்கிழமை கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை, பெங்களூா் பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்டு, பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொட்டையூா் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.
அப்போது, வேகமாக வந்த காா் ஒன்று போலீஸாா் மறித்தும் நிற்காமல் சென்றது. போலீஸாா் அதை பின் தொடா்ந்து விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தபோது அதில் 20 மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் இருந்தது.
காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கும்பகோணம் அரியதிடல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்( 40), சென்னை வியாசா்பாடி மகாகவி பாரதியாா் நகா் ஸ்வரூபக்சிங் மகன் ரோனக்சிங் (22) ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட மான்புரா முகல்லாவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் மோகித் வைஷ்ணவ் (27) என்பதும், பிரகாஷ் வீட்டில் மேலும் 50 மூட்டை புகையிலைப் பொருள்களை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
போலீஸாா் 70 மூட்டை புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் கைப்பற்றி, பிரகாஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருள்களின் மதிப்பு சுமாா் 8 லட்சம் ரூபாய் என்று போலீஸாா் தெரிவித்தனா்.