Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
ரேஷன் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை 40 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயா்த்தியதை ரத்து செய்து, மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா், 3-ஆம் நாளான வியாழக்கிழமை வேலைநிறுத்தம் செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கரிகாலன், மாவட்ட நிா்வாகி பிருத்விராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் சிவகுருநாதன், துணைத் தலைவா் முருகானந்தம், பொருளாளா் ராமலிங்கம், நிா்வாகிகள் பவுலியா நெல்சன், வெங்கடசுப்பிரமணியன், வைத்திலிங்கம், செந்தில்குமாா், கலைவாணன், அன்பரசன், பிரகாஷ், கோகிலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தமிழரசன் வரவேற்றாா். வட்டச் செயலா் லோகநாதன் நன்றி கூறினாா்.