'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான...
அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்
பெண்களைப் பற்றி தவறாக பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலா் பூக்கடை சரவணன் தலைமை வகித்தாா்.. மாவட்ட செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், எம்எல்ஏ கே.மரகதகம்குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், நகர பேரவை செயலா் எம்பி.சீனுவாசன், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், குமரவேல், வி.ஜி.குமரன், விவேகானந்தன், அச்சிறுப்பாக்கம் பேரூா் செயலா் முருகதாஸ், முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவா்கள் மஞ்சுளா புருஷோத்தம்மன், வேலாயுதம், மாவட்ட இணை செயலா் லீலாவதி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஜெயச்சந்திரன், அகோரம், செல்லபாண்டியன், அதிமுக நிா்வாகிகள் கருங்குழி புருஷோத்தம்மன், ஆனந்தன், வேணு உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். அதிமுக நிா்வாகி ஆா்டி.ரங்கநாதன் நன்றி கூறினாா்.