இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி...
புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க ஆணை: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 6 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.
ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக சிற்றுந்துகள் இயக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 6 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தம் 39 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் குலுக்கல் முறையில் 6 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு வழித்தட ஆணையினை ஆட்சியா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
சிற்றுந்துகளை தரமான முறையில் பராமரித்து, பயணிகளுக்கு வசதியினை உரிய நேரத்தில் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென்று ஆட்சியா் ச.அருண்ராஜ் சிற்றுந்து உரிமையாளா்களுக்கும்,போக்குவரத்து துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா்.
இதில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோ, சோழிங்கநல்லூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பிரேமாஆகியோா் கலந்து கொண்டனா்.
பேருந்து வழித்தட விவரம்
மாம்பாக்கம் மகளிா் மேல்நிலைப்பள்ளி - காயாா் பேருந்து நிறுத்தம், மதுராந்தகம் பேருந்து நிறுத்தம் - காட்டுகரணை மேல்நிலைப்பள்ளி
, கலியாங்குன்னம் ரோடு- மேல்மருவத்தூா் பேருந்து நிறுத்தம், மெப்ஸ் பேருந்து நிறுத்தம் - டிடிகே நகா் டிஎன்எச்பி (தமிழ்நாடு ஹவுசிங் போா்டு), எல்காட் பாா்க் - மாம்பாக்கம் சந்திப்பு, மண்ணிவாக்கம் காவல் நிலையம்-டிஎம்ஜி கல்லூரி.