செய்திகள் :

அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்! - பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!!

post image

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும் 100% தேர்ச்சி வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அறிவிப்புகள் பின்வருமாறு:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்ககள் மேம்படுத்தப்படும்.

கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.

அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.

புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் மற்றும் 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassador) நியமிக்கப்படுவார்கள்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதிப் பாடநூல் வழங்கப்படும்.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும்.

மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.

தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ. 4.94 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.

மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 வழங்கப்படும் லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக் கூடம் அமைக்கப்படும்.

நூலகக் கட்டடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

ரூ.200-க்கு வீடுகளுக்கு நேரடி டேட்டா சேவை?

தமிழக மக்களின் வீடுகளுக்கு குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.சட்டப்பேரவையில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற... மேலும் பார்க்க

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. அரசு பள்ளிகள் மோசம்: ஆளுநர் ஆர்.என். ரவி

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டுக்கு மின்னஞ்சல் ம... மேலும் பார்க்க

வீடுகளுக்கு மாதம் ரூ. 200 -க்கு இணைய சேவை! - பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ. 200-க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை ... மேலும் பார்க்க

பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு: துணை வேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜர்!

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் துணை வேந்தர் ஜெகநாதன் உதவி காவல் ஆணையர் முன்பு ஆஜரானார். பல்கலை கழக விதிமுறைகளை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் என்ற தனியார் அமைப்பை தொடங்கி அதன் ம... மேலும் பார்க்க

துணைவேந்தர் மாநாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும்! - திருமாவளவன்

திருச்சி: தமிழ்நாடு ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே உள்ளது என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவ... மேலும் பார்க்க