பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் மோட்ச தீபம்
பெஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஓம்.சக்தி பெருமாள், மாவட்ட செயலாளா் செல்வம், மாநகர மேற்குப் பிரிவு தலைவா் காஞ்சி.ஜீவானந்தம், பாஜக நிா்வாகிகள் பத்மனாபன், ஜெயப்பிரகாஷ், நந்தகுமாா், இந்து முன்னணி தலைவா் சந்தோஷ் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.