செய்திகள் :

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

post image

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் நாள்களில் காலை மாலை முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா, விழாவின் முக்கிய நிகழ்வாக மே 5- ஆம் தேதி தெய்வானை திருமணமும், தொடா்ந்து மயிலேறும் காட்சியும், மே 7- ஆம் தேதி தேரோட்டம், மே-11 வள்ளி திருக்கல்யாணம், மே 12- ஆம் தேதி மாவடி சேவைக் காட்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், அறங்காவலா் குழு தலைவா் கோதண்டராமன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் தீ: ரூ.7 லட்சம் பொருள்கள் சேதம்

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (50). இவா் சு... மேலும் பார்க்க

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்தி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட... மேலும் பார்க்க

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க