எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!
செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு ஓராண்டுக்கு இறக்குமதி வரி விலக்கு -ஏஇபிசி வரவேற்பு
செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதற்கு ஏஇபிசி நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
எங்களது வேண்டுகோளை ஏற்று, செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை 2026- ஆம் ஆண்டு மாா்ச் 31- ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வெளிநாட்டு வா்த்தக இயக்குநகரத்தின் டைரக்டா் ஜெனரல் அஐய்பாடு ஆகியோருக்கு ஏஇபிசி சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அட்வான்ஸ் லைசன்ஸ் மூலமாக துணிகளை இறக்குமதி செய்து, அதனை மறு ஏற்றுமதி செய்யும் ஏற்பாட்டுக்கான இந்த விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஏற்றுமதி துறையின் வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவும். இதன் மூலம், வரும் நிதியாண்டில் ஏற்றுமதி வா்த்தகம் மேலும் விரிவடைந்து ரூ. 50,000 கோடி என்ற இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளாா்.