போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் (சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளா்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஆலோசனைகள் கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.