செய்திகள் :

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடிப்பது சூட்டைக் கிளப்புமா?

post image

Doctor Vikatan: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் முன்கூட்டியே நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் எடுத்துக்கொள்வது எல்லாம் உதவுமா அல்லது கோடையில் இவற்றை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்குமா... பொதுவாகவே வெயில் காலத்தில் இதுபோன்ற கஷாயங்கள் எடுக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி  

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

கபசுர குடிநீரையோ, நிலவேம்பு குடிநீரையோ நோய்த்தடுப்பு மருந்தாக முன்கூட்டியே எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அவற்றை எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.

கபசுர குடிநீரோ, நிலவேம்பு குடிநீரோ... ஹெல்த் டிரிங்க்ஸ் இல்லை. அதாவது கோடைக்காலத்தில் இதுபோன்ற தடுப்பு மருந்துகளை பானகம் மாதிரி குடிக்கக்கூடாது. மற்றபடி, கொரோனா என்றில்லை, வேறு எந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், காய்ச்சல் வந்தாலும் இவற்றை முன்கூட்டியே எடுத்துக்கொள்வது நிச்சயம் பலன் அளிக்கும், நோய் வராமல் தடுக்கும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு' என்றொரு பழமொழியே உண்டு. அதற்கேற்றபடி, என்னதான் இவை தடுப்பு மருந்துகளாக இருந்தாலும் அளவுக்கு மீறியோ, நாள்கணக்கிலோ எடுக்கக்கூடாது.

கபசுர குடிநீர்

கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என எதை எடுத்துக்கொள்வதானாலும் பெரியவர்கள் என்றால் 15 முதல் 30 மில்லிக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளலாம். வயது குறைந்தவர்கள், இதைவிடவும் குறைவாக எடுத்துக்கொள்வதுதான் சரியானது. இந்த இரண்டையுமே சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வயிற்றுப் புண் பிரச்னை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்தக் கஷாயங்களைக் குடிக்கவே கூடாது.

எந்த மருந்தையும் மருத்துவ ஆலோசனையோடு எடுப்பதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Health: அம்மை நோய்; அதிக பாதிப்பு யாருக்கு? அறிகுறி, உணவு, சிகிச்சைகள் என்ன? கம்ப்ளீட் தகவல்கள்!

கோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் பி.செந்தூர் நம்பி.அம்மை ''அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமு... மேலும் பார்க்க

``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றி பாகிஸ்தான்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை 'தண்ணீர் போர்' என்றும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது பாகிஸ்தான். இந்தியாவின் நடவடிக்கைகளுக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``ராணுவத்துக்கு எதுவும் தெரியாமல் இருந்ததா?'' - உயிரிழந்தவரின் மனைவி கேள்வி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குஜராத்தியர்களில் ஒருவரான ஷைலேஷ் ஹிம்மத்பாய் கல்தியா, அடக்க நிகழ்வில் குடும்பத்தினரின் துக்கம் கோபமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்துடன் காஷ... மேலும் பார்க்க

சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய BSF அதிகாரி; சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அதேச... மேலும் பார்க்க

``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், பிரதமர் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லாமல் தேர்தல் பரப்புரைக்கு சென்றதாக விமர்சித்துள்ளார். "அமித் ஷா பதவி விலக வேண்டும்... அரசியலுக்கா... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பி... மேலும் பார்க்க