இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி...
நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்ன?
'சிந்து பைரவி' சீரியல் பிரச்னை தொடர்பாக நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு அவர் எந்தவொரு டிவியிலும் சீரியலிலோ அல்லது ரியாலிட்டி ஷோவிலோ தலைகாட்ட முடியாது என்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய 'சிந்து பைரவி' தொடர் இரண்டு தோழிகளின் கதை. அதில் சிந்துவாக ஒரு நடிகையும், 'பைரவி'யாக ரவீனாவும் கமிட் ஆனார்களாம்.
ஆனால் விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் 'குக்கு வித் கோமாளி', 'பிக் பாஸ்' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பாப்புலர் ஆகியிருந்த ரவீனாவோ ப்ரொமோ ஷூட்டெல்லாம் முடிந்த நிலையில் தொடரில் நடிக்க மறுத்து விட்டார்.
'ஹீரோயின்' எனச் சொல்லி கமிட் செய்தார்கள் என்றும் ஷூட்டிங் போன பிறகே அது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் எனத் தெரிய வந்ததாகவும் ரவீனா தரப்பில் கூறினார்கள்.
எனவே, ஒளிபரப்பு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ரவீனா.

இதனால் கோபமடைந்த தயாரிப்பு தரப்பு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய, அவர்கள் ரவீனாவுக்கு ரெட் கார்டு எனச் சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
அந்தச் சமயத்தில் நாம் ரவீனாவிடம் பேசியிருந்தோம்.
''என் மீது புகார் கொடுக்கப்பட்டது நிஜம்தான். ஆனா ரெட் கார்டெல்லாம் எனக்கு வழங்கப்படல. அதோட, இப்ப இந்த விவகாரம் சுமுகமாக முடிஞ்சிடுச்சு.
அதனால இனி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நான் தொடர்வதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை' என அப்போது சொல்லியிருந்தார் ரவீனா.
இந்நிலையில் தற்போது ரவீனாவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சீரியல் நடிகர்கள் சிலரிடம் பேசிய போது,

"ஆரம்பத்துல தயாரிப்பாளர் சங்கம் டிவி நடிகர் சங்கத்திடம் எதுவும் கலந்து ஆலோசிக்காம தடை போட்டிருக்காங்க. அதனால அந்த உத்தரவைச் சில சேனல் தரப்புல கண்டுக்கலை. அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முறைப்படி நடிகர் சங்கத்துக்குக் கடிதம் எழுத, சங்கத்துல இருந்து ரவீனாவைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க.
அவங்க தரப்புல சில கருத்துகளை அதாவது முக்கியத்துவம் இல்லைங்கிறதைத்தான் சொல்ல, ஆனாலும் கமிட் ஆகிட்டு பிறகு விலகியதை ஏத்துக்க முடியாதுனு சொல்லி அவங்களுக்கு ஓராண்டு தடை உத்தரவு போடப்பட்டிருக்கு.
தயாரிப்பு தரப்புல ரெண்டு வருஷம் கேட்க, ஒரு வருஷம் தடை போடப்பட்டிருக்கு.
இனி ரவீனா தரப்புல இருந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிச்சுக் கடிதம் ஏதாவது தந்தா மட்டுமே மேற்கொண்டு இந்த விஷயத்துல அடுத்து என்னனு தெரியும்'' என்கிறார்கள் இவர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...